community development (CD)

சமுதாய அபிவிருத்தி, சமுதாய மேம்பாடு, சமுதாய முன்னேற்றம், சமுதாய வளர்ச்சி

தமிழ் விளக்கம்

சமுதாய மேம்பாடு என்ற வார்த்தை (தனிச்) சமுதாயம் சார்ந்ததாயும், அதே நேரத்தில் உலகம் தழுவியதாயுமிருப்பதால், அது பலகோணங்களில், சர்வதேசப் பொருத்தமுடைய வகையிலும் (internationally relevant), மேம்பாட்டு முயற்சிகள் நடக்கின்ற சமுதாயத்திற்கும், அம்முயற்சிகளைச் செய்கின்ற நிறுவனங்களின் (limited to community & agency efforts) வரையறைக்குட்பட்டு விளக்கப்படுகின்றது, எல்லா விளக்கங்களிலும், இடம் சார்ந்த, விருப்ப ஒற்றுமை உள்ள சமுதாயங்கள் தங்கள் மேம்பாட்டிற்காக தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்து செய்துகொள்ளும் முயற்சிகளும், அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்வதை ஊக்குவிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் நிறுவன மற்றும் அரசின் முயற்சிகளைக் குறிப்பதாகவே அமைகின்றது. சமுதாய மேம்பாடு பற்றிய சில விளக்கங்கள். 1. மக்கள் தங்களுக்குத் தாங்களே ஒன்றுகூடி, கலந்தாலோசனை செய்து, தங்கள் முன்னேற்றத்திற்குச் சாத்தியமான வழிமுறையைத் தேர்வு செய்து அந்த வழிமுறையைச் செயலாக்கும் திறனைப்பெற்று, தங்கள் சமுதாய நிலையில் முன்னேற்றம் காண எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சமுதாய மேம்பாடு என்று குறிக்கின்றனர். 2. சமுதாய மேம்பாடு முயற்சிகளை ஒரு சமுதாயம் சுயமாகச் செய்வதாக இருக்கலாம். இம்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிப்பதை தங்கள் குறிக்கோளாகக் கொண்ட நிபுணத்துவம் பெற்ற நபர்கள் / அமைப்புகள் / அரசின் வழிகாட்டுதல்படியும் செய்யப்படலாம். 3. மாறி வரும் வாழ்க்கையையும் தங்களைச் சோர்வடையச் செய்யும் நிகழ்வுகளையும் தனிமனிதர்களாகவும், சமுதாயமாக ஒன்றிணைந்தும், கையாளும் திறனைப் பெருவதற்கான செயல்முறைகளே சமுதாய மேம்பாடு எனப்படுகின்றது. 4. மக்கள் தங்களுக்குள்ளான சமூக உறவுகளைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், மக்களுக்குள் சுயஉதவித் தன்மையை ஊக்குவிக்கவும், பொறுப்பான தலைவர்களை வளர்த்தெடுக்கவும், சமுதாய அமைப்புகளைப் புதிதாக உருவாக்கவும், அவைகளுக்குப் புத்துயிர் அளிக்கவும் ஓரிடத்தில் வசிப்பவர்களால் எடுக்கப்படும் முயற்சிகளும், அம்முயற்சிகளுக்கு வழிகாட்டும் நிபணர்களின் செயல்முறைகளையும் உள்ளடக்கியதை சமுதாய மேம்பாடு எனலாம். 5. சமுதாய முன்னேற்றமென்பது அங்குள்ள மக்களின் ஆர்வமான பங்கேற்பை அடிப்படையாக வைத்து, அவர்களெடுக்கும் முயற்சிகளின் விளைவாக, அந்தச் சமுதாயம் முழுமைக்குமான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான சூழலை உருவாக்கச் செய்யப்படும் முயற்சிகள் எனலாம்.

English

Efforts made by professionals and community residents to enhance the social bonds among members of the community, motivate the citizens for self-help, develop responsible local leadership, and create or revitalize local institutions. Community development workers have been active in Third World nations at least since the 1920s, especially in consciousness-raising, helping community residents to achieve greater collective participation, and developing local leadership. In the United States, CD workers have worked especially in underdeveloped rural settings and poor urban neighborhoods to to facilitate the residents' collaboration in increasing influence, self-sufficiency, and economic and educational opportunities.