community mental health center

சமுதாய மனநல மையம்

தமிழ் விளக்கம்

ஒரு பகுதியில் வாழும் மக்களின் மன நலப் பிரச்சனைகளைக் கையாளவும், அது தொடர்பான சேவைகளை வழங்கவும், அமெரிக்க அரசின் நிதி உதவியுடனும், கண்காணிப்பிலும் செயல்படுகின்ற பகுதி சார்ந்த அமைப்புகள் (local organization). இங்கு உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறவும் (in patient & partial hospitalization), வெளிநோயாளிகளாக ஆலோசனை பெற்றுச் செல்லவும், அவசர மற்றும் இடைக்காலச் சிகிச்சை பெறவும், நோய் கண்டறியும் பரிசோதனை வசதிகளும், மது போதைப் பழக்கத்தைக் கையாளும் சிகிச்சை, சிகிச்சைக்குப் பின்னான தொடர் கண்காணிப்பு, முதியோர் மற்றும் குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

English

A local organization, partly funded and regulated by the federal government, that provides a range of psychiatric and social services to people residing in the area. These include inpatient, outpatient, partial hospitalization, emergency, and transitional services; programs for older people and for children; screening and follow-up care; and programs that deal with alcohol abuse and substance abuse.