community organization

சமுதாய அமைப்பு, சமுதாய அமைப்பாக்கல்

தமிழ் விளக்கம்

திட்டமிட்ட கூட்டுச் செயல்பாடுகளின் மூலம், இடம் சார்ந்த அல்லது பொது ஆர்வமுடைய சமுதாயப் (மக்களின்) பிரச்சனைகளைக் கையாளவும், சமூக நலனை மேம்படுத்த முயலும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு உதவ, சமூகப்பணியாளர்கள் கையாளும் செயல்முறைகள். இம்முறையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, அதனடிப்படையில் திட்டமிட்டு, அதற்கேற்ப உபாயங்களை (வியூகம்) வகுத்து, தேவையான ஆதரவை, ஆதாரங்களைத் திரட்டி, அதைக் கையாளத்தக்க தலைமையைக் கண்டடைந்து, மக்களுக்கிடையே பரஸ்பர உறவுகளை ஊக்குவித்து, அவர்களுடைய முயற்சிகளை எளிதாக்க உதவும் செயல்முறைகளைச் சமுதாய அமைப்பாக்கல் என்கின்றனர்.

English

An intervention process used by social workers and other professionals to help individuals, groups, and collectives of people with common interests or from the same geographic areas to deal with social problems and to enhance social well-being through planned collective action. Methods include identifying problem areas, analyzing causes, formulating plans, developing strategies, mobilizing necessary resources, identifying and recruiting community leaders, and encouraging interrelationships among them to facilitate their efforts.