community psychology

சமுதாய உளவியல்

தமிழ் விளக்கம்

சமுதாய உளவியல் என்பது தனிநபர்கள் சமுதாயத்துடனும், சமூகத்துடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முறையையும், சமுதாய நிகழ்வுகளில் பங்கெடுக்கும் பாங்கையும், சமுதாய நிகழ்வுகள் மக்களின் உடல் மன நலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்வதன் மூலம், சமுதாய வாழ்க்கைத் தரத்தைப் புரிந்துகொண்டு, அதனடிப்படையில் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தரும் அறிவியல் துறை. சமுதாய உளவியல் மனநலச் சீர்கேடுகளுக்கான சமுதாயக் காரணங்களைக் கண்டறிந்து மனநலப் பிரச்சனைகளைத் தடுக்கவும் பெரிதும் பயன்படுகின்றது.

English

The specialty within psychology that emphasizes prevention of mental illness, education about good mental health practices, and early diagnosis and treatment of mental disorders.