community service

சமுதாய சேவை

தமிழ் விளக்கம்

சமுதாய சேவை என்பது ஒரு சமுதாயத்தின் கல்வி, பொழுது போக்கு, சுகாதாரம், சட்டம், சமூகநலன், வேலைவாய்ப்பு, அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்கின்ற தன்னார்வலர்கள், ஊதியத்திற்காக இப்பணிகளைச் செய்யும் உள்ளூர்க்காரர்கள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளைக் குறிக்கும். இது தவிர குடிமக்களுக்கு இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நாடுகளில், அதற்கு மாற்றாகக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாய சமுதாய சேவை செய்யும் முறையும், சிறைத் தண்டனைக்கும் அபராத முறைக்கும் மாற்றாக, நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலம் வரை ஒருவர் செய்யும் சமுதாய சேவையும், பள்ளி, கல்லூரிகளில் கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யக் கட்டாயமாக்கப்படும் சமுதாய சேவைப் பணிகளும், சமுதாய சேவை என்றே அழைக்கப்படுகின்றன.

English

Efforts by volunteers, paid indigenous workers, and professionals to meet the educational, recreational, health, legal, political, vocational, and social welfare needs of people at the local level. This term is used widely to refer to activities for neighborhood improvements made by civic associations, churches, social groups, and fraternal organizations. Typical community service activities include drug prevention education, recreation for people with disabilities, physical fitness programs for older people, and neighborhood cleanup drives.