Community Work Experience Program (CWEP)

சமுதாயப் பணியில் அனுபவம் பெறுவதற்கான திட்டம்

தமிழ் விளக்கம்

இந்தத் திட்டத்தின்படி, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டப் பயனாளிகள், நிரந்தரமாக நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திராமல், அவர்களுக்குப் பணி / தொழில் செய்யும் திறனை வளர்க்கும் அனுபவத்தை உருவாக்க வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் பெரும் உதவியின் அளவைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணி நேரம், அரசு அல்லது தொண்டு நிறுவனங்களில் பணிப்பயிற்சி பெற வேண்டும். பணியில் காலம் தவறாமை, சக பணியாளர்களிடம் நல்லுறவு, வாடிக்கையாளர்களுடன் சுமுகமாகத் தொடர்பு கொள்ளல் போன்றவற்றில் திறனை வளர்த்து, தாங்களும் வேலை செய்து வருமானமீட்ட வேண்டுமென்ற ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவதற்கு இந்தப் பயிற்சி உதவுகிறது.

English

A federally sponsored training program designed to help recipients of Aid to Families with Dependent Children (AFDC) acquire workplace coping skills (such as coming to work on time, relating to other employees responsibly, or communicating with customers appropriately), as well as gain self-confidence and motivation for work, so they can enter the workforce and save taxpayer dollars. CWEP requires clients to work a specified number of hours monthly (based on the amount of the AFDC benefit divided by the minimum wage) at public or nonprofit organizations. See also workfare, learnfare, and JOBS program.