competence

தகுதி, செயல்திறன்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட செயலை எதிர்பார்க்கப்படும் தரத்துடன் செய்யத் தேவையான தகுதி, சுருக்கமாக ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை முடிக்கத் தேவையான திறன். இது அறிவாற்றல் திறன், மனோபாவம், நடைமுறை ஞானம் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பது. சமூகப்பணியைப் பொருத்தமட்டில், சமூகப்பணியின் தொழில் நெறிமுறைகளுக்கு இணங்க, சமூகப்பணி நோக்கங்களை அடைய, ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை எடுத்துச் செய்ய உதவும் கல்வித் தகுதி, அனுபவ ஞானம் மற்றும் அதற்கான தரச் சான்றிதழ் தேர்வுகளில் தேறியிருப்பதும் திறனாகக் கருதப்படுகின்றது.

English

1. The ability to fulfill the requirements of a job or other obligation. Competence in social work includes possession of all relevant educational and experiential requirements, demonstrated ability through passing licensing and certification exams, and the ability to carry out work assignments and achieve social work goals while adhering to the values and the code of ethics of the profession. 2. In the legal system, the capacity to understand and act reasonably.