competing mandate

முரண்பட்ட நிலைப்பாடுடைய கட்டளை / பணிப்பாணை, .தெளிவற்ற கட்டளை

தமிழ் விளக்கம்

போதுமான நிதி ஆதாரங்களோ, நிர்வாகக் கட்டமைப்போ இல்லாமல் முன்னுரிமைப்படுத்தப்படாத இரண்டு மூன்று செயல்திட்டங்களை அமுல்படுத்த நிறுவனம் கொடுக்கும் பணிப்பானை.
உதாரணமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைத் தடுப்பதில், வன்முறையில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், காவல்துறைக் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி அளிக்கவும், வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒருசேரச் செய்யுமளவிற்கு நிதி ஒதுக்கீடோ, நிர்வாகக் கட்டமைப்போ இல்லாதபோது இந்த ஆலோசனைகளை எல்லாம் முரண்பட்ட நிலைப்பாடுடைய கட்டளை அல்லது பணிப்பாணை என்று சொல்லலாம்.

English

The legitimate requirements made of an organization to fulfill two or more functions even though no clear priorities are set and resources permit support for only one. For example, in combating the drug problem, various public constituencies have competing demands for better law enforcement and imprisonment, more-effective controls against smuggling, preventative education, and treatment for drug abuse. However, public monies cannot fund all these programs; thus, choices must be made. Effective administrators cope with competing mandates by finding ways to increase resources and by establishing better systems for ordering priorities and long-range planning. See also conflicting mandate and ambiguous mandate.