complementary therapy

குறை நிரப்பு சிகிச்சை, முழுமையாக்கவல்ல சிகிச்சை

தமிழ் விளக்கம்

முழுமையாக்கவல்ல சிகிச்சை என்பது பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. மாற்று மருத்துவம் (alternative medicine & therapy), முழுமைச் சிகிச்சை (holistic therapy), பாரம்பரிய மருத்துவம் (traditional medicine), அலகு குத்துதல் (குத்தூசி மருத்துவம் -Acupuncture), நறுமணச் சிகிச்சை (மலர் மருத்துவம் - aromatherapy), மூலிகை மருத்துவம் (herbal medicine), வர்மப் பிடி சிகிச்சை (osteopathy), இயற்கை மருத்துவம் (natural medicine), ஹோமியோபதி (Homeopathy), உடலியக்க மருத்துவம் (chiropathy), ரெய்கி மற்றும் யோக சிகிச்சை என்று பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. சமூகப்பணியைப் பொருத்தமட்டில் உளப்பிரச்சனைகளுக்கு, தனியாக அளிக்கப்படும் (individual therapy) சிகிச்சைகளோடு, குழு சிகிச்சையையும் குடும்ப சிகிச்சையையும் இணைத்து மேற்கொள்வது.

English

An additional type of intervention that the social worker or other psychotherapist provides for certain clients, occurring along with individual therapy. Most commonly this is group therapy or family therapy. It is important that the two forms of therapy are well integrated so that the goals of the different procedures are consistent.