computerized databases
கணனி மயமாக்கப்பட்ட விவரக் குறிப்புகள், செய்திகள், தரவுகள்
தமிழ் விளக்கம்
கல்வி, அறிவியல், சட்டம், மருத்துவம், வணிகம் மற்றும் பிற தொழில்முறை இலக்கியங்கள் தொடர்பான தகவல்களைக் கணனியில் சேர்த்து வைப்பது. இப்படி சேர்த்துவைக்கப்பட்ட தகவல்களைக் கணனி மற்றும் இணையதள வசதி கொண்டவர்கள் இலவசமாகவோ, சந்தா செலுத்தியோ பெற்றுக்கொள்ளலாம். தேசியச் சமூகப்பணி சங்கத்தின் இணைய தளம் மூலமாக 1977 ஆம் ஆண்டிலிருந்து வெளியான சமூகப் பணி சம்பந்தமான கட்டுரைகளின் சுருக்கத்தை அதில் உறுப்பினராக உள்ள சமூகப் பணியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அமெரிக்க உளவியல் சங்கம், தேசிய மருத்துவ நூலகம் போன்ற அமைப்புகளின் தளங்கலிருந்தும் சமூகப்பணியாளர்கள் தங்களுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். கணனி மற்றும் இணையத் தொழில்நுட்பம் மேம்பட, மேம்பட தகவல் அளிக்கும் தளங்கள் அதிகரித்து, தகவல் பெறுவதை எளிதாக்கி இருக்கின்றது.
English
Electronic storage of information, especially from the academic, scientific, legal, medical, and business professional literature. Social workers have access to these databases using a computer, modem, and an on-line database such as NASW's Social Work Abstracts, which covers social work journal literature abstracts from 1977. Another useful database is the American Psychological Association's Psyc INFO, which covers psychology, psychiatry, and social work literature since 1967. The National Library of Medicine covers the medical literature since 1966. Hundreds of other databases can be found in public and academic libraries. Most of the on-line database information is also available on CD-ROM disks.