concentrations

செறிவு, ஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், அகக்குவிப்பு. ஒருமுகச் சிந்தனை, கருத்தூன்றல்

தமிழ் விளக்கம்

சமூகப் பணி மாணவர்களுக்குச் சமூகப்பணி தொழில் சார்ந்த ஏதேனும் ஒரு பிரிவில் அதிகத் திறனும், நிபுணத்துவமும் பெற வடிவமைக்கப்பட்ட பாடதிட்டங்கள். இது சமூகப் பணி முறைகள் சார்ந்ததாகவோ (1.தனியாளர் பணி (CaseWork), 2. சமூகக் குழுப்பணி (Social Group Work) 3. சமுதாய அமைப்பாக்கம் (Community organization) 4. சமூகப் பணி ஆய்வு & மதிப்பீடு (Social Work Reserach & Evaluation) 5. சிகிச்சை முறைகள் (clinical Social Work) 6. திட்டமிடல் நிர்வாகம் கொள்கை வரைவு (planning policy administration) 7.குடும்ப சிகிச்சை (Family Marital Treatment) 8. எல்லா முறைகளும் அடங்கிய பொதுவான சமூகப் பணி (generic social work), சமூகப்பணியாளர்கள் பணியாற்றும் களம் சார்ந்ததாகவோ (fields of Practice), சமூகப்பணி அக்கறை கொள்ளும் மக்கள் சார்ந்ததாகவோ (போதைக்கு அடிமையானவர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர்) இருக்கலாம். சமூகப் பணியின் அடிப்படைப் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்த சிறப்புப் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்

English

The term used by social work educators for clusters of courses, parts of courses, or other formal learning experiences that provide the social work student with deeper and more-focused knowledge and skill in certain areas of professional concern. After students have acquired formal education in basic areas of social work knowledge, they are often required, as part of their education, to select one or more concentrations that reflect their own interests and professional directions. Schools of social work have different concentrations and ways of defining their concentrations. In most schools of social work, concentrations are defined according to specific methods in social work, fields of practice, special populations, and special problems. Methods concentrations may include social casework, social group work, community organization, research evaluation, direct clinical practice, administration–policy–planning combination, family– marital treatment, and generic social work practice combining a macro orientation and a micro orientation. Fields-of-practice concentrations include child welfare, mental health, health care, school social work, criminal justice, gerontology, rural social work, industrial social work, family and child welfare services, and various combinations. Special problems concentrations include substance abuse and poverty, and special populations concentrations include such groups as people of color and women.