concrete operations stage

பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி

தமிழ் விளக்கம்

மனிதரின் அறிதல் திறன் மேம்பாடு அவர்கள் பிறப்பிலிருந்தே தொடங்கி படிப்படியாக வளர்வதாக ஜீன் பியாஜியே (Jean Piaget 1896 - 1980) என்ற உளவியலார் நிரூபித்தார். மனிதரின் அறிதல் திறன் நான்கு நிலைகளில் ஏற்படுவதாகக் கண்டறிந்தார். அவையாவன
1. தொட்டுணர்வதால் ஏற்படும் அறிவு வளர்ச்சிப் பருவம் அல்லது புலன் இயக்கச் சிந்தனை வளர்ச்சி (sensorimotor stage (birth to age two) - இந்தப் பருவத்தில் பல்வேறு பொருட்களை / தன்னைச் சுற்றியுள்ள உலகை மொழி உதவியின்றி புலன்களின் வழியேயும், உடலியக்கங்கள் வழியும் அறிந்து கொள்வது (.பிறப்பிலிருந்து 2 வயது வரை).
2. முற்சிந்தனை வளர்ச்சி (pre operational stage) குழந்தைகள் சிந்திக்க ஆரம்பித்திருந்தாலும், எல்லாவற்றையும் தேவைகள், பயன்களுக்கு ஏற்பப் பொருள் கொண்டு, மற்றவர்களின் தருக்கங்களை / நியாயங்களை புரிந்துகொள்ளமுடியாது (2 வயதிலிருந்து 7 வயது வரை).
3. பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (concrete operation stage) அவர்களால் உருவுள்ள ஸ்தூலமான சிந்தனைகளைப் புரிந்துகொள்ளமுடிந்தாலும், அதிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களிலிருக்கும், பிறரின் சிந்தனையிலிருக்கும் மறைபொருளையும், அனுமானங்களையும் புரிந்து கொள்ள இயலாது (7 வயதிலிருந்து 11 வயது வரை)
4. முறையான சிந்தனை வளர்ச்சி (formal operation stage) இப்பருவத்தில் தருக்க (logic) அறிவையும், ஊகித்தறியும் திறனையும், ஒன்றிலிருக்கும் மறைபொருளையும் அறியும் திறன் மேம்படும் (11 வயதிற்கு மேல்). இந்த நான்கு நிலைகளிலும் அறிவிற்கான அடிப்படை கட்டுமானக் குறியீட்டுத் தொகுதிகள் (schemas) எப்படி உதவுகிறது என்பதையும், அது ஒரு வளர்ச்சி நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எப்படி மாற்றி அமைக்கப்படுகின்றன என்பதையும் அவர் விளக்கினார்.

English

The phase of cognitive development that, according to Piagetian theory, occurs between ages seven and 11, in which the individual learns to apply logic to observable and manipulable physical relationships.