concrete services
(உணவு, உடை, வீடு போன்ற) ஸ்தூலமான சேவைகள்
தமிழ் விளக்கம்
பிரச்சனைக்குட்பட்டவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்களை ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டுவர உணவு, உடை, உறையுள், போக்குவரத்து வசதிகள் போன்ற ஸ்தூலமான சேவைகளை அளிப்பது. இது பிறவகையான சேவைகளான ஆறுதல் மூலம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது, உளநோய்க்கான சிகிச்சை, உறவுகளை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் மனத்தெளிவிற்கான கல்வி போன்ற அருவமான உதவிகளிலிருந்து வேறுபட்டது.
English
The type of direct social services in which clients are provided with tangible resources needed to resolve specific problems or attain a normative standard of well-being, such as food, housing, transportation, clothing, or access thereto. These social services are compared with those in which the social worker provides important but intangible services, such as reassurance, knowledge, psychotherapy, and relationship-building skills.