concurrent placement
(வகுப்பறை போதனையோடு, களப்பணி பயிற்சியும்) ஒரே நேரத்தில் / உடன் நிகழும் பணி அனுபவம், அறிதலையும், செயலையும் இணைக்கும் களம்.
தமிழ் விளக்கம்
வகுப்பறை போதனையோடு களப்பணி அனுபவமும் இணைந்த சமூகப்பணிக் கல்வி போதனா முறை. இம்முறையில் களப்பணியில் கற்றுக்கொண்டதைக் கொண்டு வகுப்பறையில் கற்றுக்கொண்டதை செம்மைப்படுத்தவும், வகுப்பறையில் கற்றுக்கொண்டதை வைத்து களப்பணிச் செயல்பாடுகளைச் செழுமைபடுத்தவும் உதவும் கற்றல் முறை.
English
In social work education, the format for field placement in which the student alternates classroom experiences with work in a social agency on different days of each week. This provides the student with opportunities for discussion and questions in the classroom about field experiences as well as opportunities in the agency to apply what is learned in class. See also block placement.