conditioned stimulus (CS)

நிபந்தனைக்குட்ட்பட்ட தூண்டுதல், ஆக்க நிலைநிறுத்தத் தூண்டுதல்

தமிழ் விளக்கம்

தூண்டுகோல் என்பது ஒரு மனிதன் புறத்தே நிகழும் நிகழ்வை உணரும் விதம். அந்த உணர்தல் பகுத்தறிவைத் தூண்டுவதாகவோ, ஏதாவதொரு உணர்வை வெளிப்படுத்துவதாகவோ, உணர்வை வலுவூட்டுவதாகவோ, உணர்வைக் கட்டுப்படுத்துவதாகவோ, அந்தத் தூண்டலுக்கு எந்த எதிர்வினையுமாற்றாமல் நடுநிலை வகிப்பதாகவோ இருக்கலாம். இத்தூண்டுதல் பெரும்பாலும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் அமையும் போது, அந்த அனுபவங்களே உணர்வுகளைத் தூண்டும். எடுத்துக்காட்டாக தெருநாய்கள் எல்லோரிடமும் ஒரேமாதிரியான உணர்வுகளைத் தூண்டுவதில்லை. மாறாகத் தெருநாய்களிடம் கடிவாங்கிய ஒருவருக்கு தெருநாய்களைக் கண்டால் பயமெழுவது நிபந்தனைக்குட்பட்ட தூண்டல் எனலாம்.
பார்க்க: Respnse - மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, ஏற்புத் தன்மை, பதில் உணர்வு, பிரதிபலிப்பு - ஒரு தூண்டுதலுக்குச் சட்டென்று தோன்றும் எதிர்வினை. (எ.கா. முழங்காலுதறுதல், எச்சில் சுரத்தல் மற்றும் ஏதாவதொரு விசையை அழுத்துதல்), தன்னுடைய உதவிகோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது சமூகப்பணியாளர் மீது வாடிக்கையாளருக்கு ஏற்படும் கோபமும், மனைவியை சமாதானப்படுத்த கணவர் வாங்கி வரும் பூங்கொத்தும் உதாரணங்களாகும்.

English

A previously neutral event in the environment that begins to elicit a learned or conditioned response (CR) when paired with an unconditioned stimulus (US). For example, seeing a dog does not elicit fear in all individuals, but if an individual associates dogs with being bitten, the sight of a dog can elicit fear.