condom

கருத்தடை உறை, ஆணுறை

தமிழ் விளக்கம்

ஆணுறை (Condom) என்பது ஆண்கள் உடலுறவின் போது அணியும் ஒரு சாதனமாகும். பெரும்பாலும் இயற்கை இரப்பரால் (Latex) தயாரிக்கப்படுகிறது. இது ஆண்குறியை மூடி அணியப்படுவதால் உடலுறவின்போது வெளியேறும் விந்து பாலியற் துணையின் பெண்குறிக்குள் நுழைவதைத் தடுக்கிறது. விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் ஆணுறை பயன்படுகிறது. பயன்படுத்துவது இலகுவென்பதாலும் பக்கவிளைவுகள் இல்லையென்பதாலும் இதன்பயன்பாடு குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆண்களுக்காக இருக்கும் ஆணுறை போன்று பெண்கள் அணிந்துகொள்ளவும் உறைகள் பயன்பாட்டில் உள்ளன.

English

A thin sheath of rubber, latex, polyurethane, or similar material that fits tightly over the penis and is used for contraception and the prevention of sexually transmitted diseases (STDs) such as acquired immune deficiency syndrome (AIDS), syphilis, gonorrhea, and genital herpes. Condoms for females are being tested and marketed.