conduct disorder

(சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படும்) நடத்தைக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

நடத்தைக் கோளாறு என்பது அந்தந்த வயதிற்குத் தகுந்த நடத்தை நெறிகளையும், சமூக நெறிகளையும் பின்பற்றாது மற்றவரின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுவது. சிறுவர்களிடத்திலும் இளைஞர்களிடத்திலும் நான்கு வகையான நடத்தைக்கோளாறுகள் பொதுவாகக் கண்டறியப்பட்டுள்ளன. 1. அடாவடியாக நடந்துகொள்ளல் (வலுச் சண்டைக்குச் செல்லல் - அச்சுறுத்தல், அடிதடியில் இறங்குதல்), 2.. வன்முறையற்ற வகையில் இழப்பை ஏற்படுத்தல் (சொத்துக்கள் / பொருட்களை சேதப்படுத்தல்) 3. ஏமாற்றுதல் திருடுதல், 4. விதிமுறைகளை துச்சமென மதித்தல். இந்த மாதிரியான கோளாறுகள் 10 வயதிற்குள் வந்தால் குழந்தைப்பருவ கோளாறு என்றும், 10 வயதிற்கு மேல் வந்தால் குமரப்பருவ கோளாறு என்றும் சொல்வர்.

English

A repetitive and persistent pattern of behavior in which the rights of others are violated as are age-appropriate norms and social rules. This condition, which is noted primarily in children and youths, is of four types: (1) aggressive conduct (causes or threatens physical harm to others), (2) nonaggressive conduct (causes property loss), (3) deceitfulness or theft, (4) and serious violations of rules. The disorder is classified as “childhood onset type” if it seems to begin before age 10, and “adolescent-onset type” if it occurs after age 10. See also oppositional defiant disorder.