confabulation
புனைவு / கற்பனை மூலமாகத் தகவல் / நினைவு இடைவெளியைச் சரிக்கட்டுதல்
தமிழ் விளக்கம்
புனைவு / கற்பனை மூலமாகத் தகவல் / நினைவு இடைவெளியைச் சரிக்கட்டுதல்.
பார்க்க: http://cdmissmdu.blogspot.in/2013/05/vettupuli-novel-what-i-taught-and.html வெட்டுப்புலி வாசிப்பனுபவம் - தகவல் சேகரிப்பில் எதிர்கொள்ளும் தகவல் இடைவெளிகள் (Information Gaps) சமூகப் பணியாளர்களை அலைக்கழிக்கும். அந்த இடைவெளியை இட்டு நிரப்பாதவரை சமூகப்பணியாளரால் முழுமையைப் புரிந்துகொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்ப முன்னேற்றப் பணியாளர்கள் தங்களின் உள்ளுணர்வை துணைக்கு வைத்துக் கொள்வார்கள். எழுத்தாளர்கள் “புனைவின் சொற்கள் கொண்டு பல வெற்றிடங்களை மூட” படைப்புத் தந்திரத்தைக் கையாளுவார்கள். “பணம், மின்சாரம், சுதந்திரம் எதுவும் இல்லாமலிருந்த ஒரு காலகட்டத்தை, எல்லாமே இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் புரிந்துகொள்ள ஒரு கால எந்திரப் பயணம் செய்யவேண்டும். அதை நாம் இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள ”கிழிந்த டவுசரை ஒரு டைலர் ரப் அடித்து தைத்துக் கொடுக்க, கிழிந்த பகுதியை இணைத்து மேலும் கீழும் தைப்பான். டவுசரின் நிறத்திலேயே, அசப்பில் பார்த்தால் தெரியாத மாதிரி தைத்துக் கொடுப்பான். அதை இன்னும் கொஞ்சம் வாகாகச் செய்யமுடிந்தால், டார்னிங் செய்வதுபோல செய்நேர்த்தி இருக்கும்”. தகவல் இடைவெளிகளை இட்டு நிரப்ப, “புனைவுத் திறம்” வேண்டும். “கால எந்திரப் பயணம்” செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக “டார்னிங்” செய்யத் தெரிந்திருக்கவேண்டும்.

English
The act of making up for gaps in memory by fabricating stories or details.