confidence crimes

நம்பிக்கை மோசடி, நம்ப வைத்து ஏமாற்றுதல், நம்ப வைத்து மோசடி செய்பவர்

தமிழ் விளக்கம்

ஒருவரின் இரக்க உணர்வையோ, அப்பாவித்தனத்தையோ, தற்பெருமையையோ, பேராசையையோ, பொறுப்பற்ற தன்மையையோ நேர்மையற்ற நடத்தையையோ சாதகமாக்கி, ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று பின் அவரை ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்து அவரிடமிருந்து பணத்தையோ, பொருளையோ, பிற ஆதாயங்களையோ சட்டத்திற்குப் புறம்பான வழியில் பெறுவது. இவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ செயல்படுவர்.

English

Unlawfully cheating people out of their money or property by winning their trust and falsely claiming that their money will be put to some beneficial use. Such an act is also referred to as a “con game.” See also con artist.