confidence level

ஆய்வின் நம்பக நிலை

தமிழ் விளக்கம்

ஆய்வு மொழியில் நம்பக நிலை என்பது ஒரு ஆய்வு ஊகம் எந்த அளவு உண்மையானது, நிகழக்கூடியது, சம்பவிக்கக்கூடியது என்பதை அளக்க முடியும் தன்மை. உதாரணமாக தேர்தல் முன் கணிப்புக் கணக்கெடுப்பில், ஒரு குறிப்பிட்ட கட்சி 60 சதவீத இடங்களைப் பெறும் என்றும், அந்த கணக்கெடுப்பின் நம்பகநிலை 3 சதவீதம் என்று குறிக்கப்பட்டால், அந்த கட்சி 57 - 63 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என்று பொருள். இதை இன்னொரு முறையிலும் விளங்கிக் கொள்ளலாம். ஒரு ஆய்விற்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் அதன் மூலத்தை (population) எந்த அளவு துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அளவிடும் முறையாகும். ஆய்வு மாதிரிகள் 95 சதவீத நம்பகத் நிலை கொண்டவை என்றால் அது மூலத்தை 95 சதவீதம் பிரதிபலிக்கின்றது என்று பொருள்படும்.

English

A research term referring to the degree to which an inference is reliable. This is expressed quantitatively as a percentage. Thus, when a conclusion is stated as being at the .05 level of confidence, the statement is likely to be wrong only 5 percent of the time. The lower the percentage (for example, .01 or .001), the higher the degree of confidence in the statement.