confidentiality

இரகசியத்தன்மை, கமுக்கம், மந்தணம்

தமிழ் விளக்கம்

இரகசியத் தன்மை என்பது சில தகவல்களைப் பெருவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அல்லது கொடுக்கப்படும் வாக்குறுதிகள். இரகசியக் காப்பு என்பது சமூகப்பணியில் வலியுறுத்தப்படுகின்ற முக்கியமான தொழில் அறம் / நெறிமுறை / தர்மம். வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்களை, சமூகப்பணியாளருடன் அவர் உரையாடியதை, அவரைப் பற்றிய கணிப்புகளை / கருத்துக்களை, அவரைப் பற்றிய ஆவணங்களை வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் பகிர்ந்து கொள்ளலாகாது என்ற தொழில் நெறி. சில நேரங்களில் சட்டப்படிக் காவல் துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் உதவும் பொருட்டு வாடிக்கையாளர் பற்றித் (வாடிக்கையாளரின் தண்டனைக்குரிய குற்றச் செயல்கள்) தெரிவிக்க வேண்டிய தகவல்கள் இந்த இரகசியக் காப்பில் அடங்காது.

English

A principle of ethics according to which the social worker or other professional may not disclose information about a client without the client's consent. This information includes the identity of the client, content of overt verbalizations, professional opinions about the client, and material from records. In specific circumstances, social workers and other professionals may be compelled by law to reveal to designated authorities some information (such as threats of violence, commission of crimes, and suspected child abuse) that would be relevant to legal judgments. See also Tarasoff, absolute confidentiality, and relative confidentiality.