conflict
முரண்பாடு, சச்சரவு / பிணக்கு / மனப் போராட்டம், ஒன்றுடனொன்று ஒவ்வாதிருத்தல், இணங்காதிருத்தல், சம்மதிக்காதிருத்தல், அபிப்ராய பேதம் கொள்ளல்
தமிழ் விளக்கம்
முரண்பாடு / மனப்போராட்டம் என்பது இருவேறு மனிதர்களுக்கிடையே, குழுக்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே அதன் நோக்கங்களுக்கிடையே உள்ளார்ந்த இணக்கமின்மையை வெளிப்படுத்தும் நிலை. உளவியல் ரீதியாக ஒரு மனிதன் ஒன்றுக்கொன்று ஒவ்வாத நோக்கங்களையோ, தூண்டல்களையோ அல்லது தேவைகளையோ வைத்துக்கொண்டு மனச் சஞ்சலப்படுதல்.
English
1. In groups or communities, the striving by two or more parties to achieve opposing or mutually exclusive goals. 2. In psychological terms, the mental struggle of two or more mutually exclusive impulses, motives, drives, or social demands.