conflict induction

முரண்பாட்டை / சச்சரவை மோதலைத் தூண்டுதல்

தமிழ் விளக்கம்

மாறுபட்ட பிரச்சனைகளையும், மதிப்பீடுகளையும் ஒரு குழுவிலோ, குடும்ப உறுப்பினர்களிடமோ, சமுதாயத்திடமோ அறிமுகம் செய்து, அதன் மீது வாதப் பிரதிவாதங்களைத் தூண்டி, அதையொட்டி அவர்களிடம் கருத்தொற்றுமையையோ, கூட்டணியையோ உருவாக்குதலென்பது சமூகப் பணியாளர்களும், சமுதாய அமைப்பாளர்களும் கையாளும் தொழில்முறை. தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை வெளிப்படையாக விவாதிக்க முன்வராத குடும்பங்களிலும், சமுதாயக் குழுக்களிலும் இதனால் ஆரோக்கியமற்ற சூழ்நிலை உருவாகி, அவர்களுக்குள் அன்னியத் தன்மை ஏற்பட்டுவிடும். அவர்களுக்குள் இந்தமாதிரியான விவாதங்களை ஏற்படுத்தும்போது புரிதல் மேம்படும்.

English

The technique used especially by social workers in community organization and family therapy in which divergent issues and values are introduced to force members of the group into active confrontation, debate, and new coalition building. The families and citizens' groups with whom this is effective tend to be those that habitually avoid conflict and social discomfort, thus maintaining a stalemate that is unhealthy for some or all of their members.