conflict resolution
பிணக்கு / சச்சரவைத் தீர்த்தல், நல்லிணக்கம், சமரசம்
தமிழ் விளக்கம்
அடையவேண்டிய நோக்கங்களுக்காகவோ, அதிகாரத்திற்காகவோ அல்லது ஆதாரங்களுக்காகவோ முரண்பாடும் கட்சிகள் அல்லது குழுக்களிடையே அந்த முரண்பாட்டினால் எழும் பிரச்சனைகளைத் தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ செய்யப்படும் முயற்சிகளைச் சமரசம் செய்துவைத்தல் எனலாம். சமூகப்பணியாளர்கள் முரண்படும் குழுக்களிடம் அவர்கள் எதனால் முரண்பாடுகிறார்கள் என்பது பற்றி விளக்கிப் புரிய வைத்தும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலால் இருவரும் அடையும் பயன்கள் பற்றியும், இருவருக்கிடையே மத்தியஸ்தம் செய்து வைத்தும், ஒருவருக்கொருவர் உடன்பாடு காணவோ, ஒருவர் விருப்பத்திற்கு அடுத்தவரை ஓரளவாவது இணங்க வைத்தோ, யாராவது ஒருவரை மோதலிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளத் தூண்டியோ சமரச நிலையை அடைய உதவுவார்.
English
The process of eliminating or minimizing the problems that result when different parties or groups compete with one another for the same limited objectives. This process most commonly occurs by facilitating compromises, achieving accommodation, or sometimes by the total surrender of one group to the other. Social workers often engage in this process when they help clarify, educate, mediate, and propose compromises or alternative solutions to clients or client systems who are contesting some mutual objectives.