conflict theories

சமூக முரண்பாடுகள் பற்றிய கோட்பாடுகள்

தமிழ் விளக்கம்

மோதல் பற்றி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில், அரசியல் ஆதிக்கம் அடிப்படையில், கருத்தியல் அடிப்படையில் விளக்கப்பெற்ற பல சமூகவியல் கண்ணோட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுபவை காரல் மார்க்ஸ், ஜார்ஜ் சிம்மெல், லெவிஸ் கோசர் போன்றவர்களின் கோட்பாடுகளாகும். காரல் மார்க்ஸ் வர்க்க ரீதியான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே எல்லா முரண்பாடுகளுக்கும் காரணமாதலால் வர்க்க உருவாக்கத்தை ஒழிப்பதே முரண்பாடுகளைக் களையும் வழி என்றார். சிம்மெல் மற்றும் கோசர் போன்றவர்கள் முரண்பாடுகள் தன்னளவில் மோசமானதல்ல என்றும், அது குழு இணக்கத்தையும், குழு உறுப்பினர்கள் தங்கள் சக்தியை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அவர்களைத் தயார்படுத்த உதவும் என்றனர்.

English

Explanations about the nature, progress, and consequences of social conflict. The most prominent theories have been developed by Karl Marx, George Simmel, Lewis Coser, and others. Marx hypothesized that conflict would eventually lead to an overthrow of the power group, leading to a classless, conflict-free society. Simmel and Coser suggested that conflict is not inherently bad and that it serves such important functions as solidifying the in-group, increasing group cohesiveness, and mobilizing the energies of group members.