conflicting mandate
முரண்பட்ட / குழப்பமான ஆணை, முரண்பட்ட நிலைப்பாடுடைய கட்டளை / பணிப்பாணை, .தெளிவற்ற கட்டளை
தமிழ் விளக்கம்
போதுமான நிதி ஆதாரங்களோ, நிர்வாகக் கட்டமைப்போ இல்லாமல் முன்னுரிமைப்படுத்தப்படாத இரண்டு மூன்று செயல்திட்டங்களை அமுல்படுத்த நிறுவனம் கொடுக்கும் பணிப்பானை.
உதாரணமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைத் தடுப்பதற்கு, வன்முறையில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், காவல்துறை கண்காணிப்பை அதிகப்படுத்தவும், பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி அளிக்கவும், வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒருசேரச் செய்யுமளவிற்கு நிதி ஒதுக்கீடோ, நிர்வாகக் கட்டமைப்போ இல்லாதபோது இந்த ஆலோசனைகளை எல்லாம் முரண்பட்ட நிலைப்பாடுடைய கட்டளை அல்லது பணிப்பாணை என்று சொல்லலாம்.

English
The legitimate requirements made of an organization to fulfill a variety of functions that are inherently contradictory or opposed to one another. For example, the citizens of one city want the administration to get its homeless population off the streets but also to end overcrowding in its homeless shelters. See also competing mandate and ambiguous mandate.