congenital abnormalities

பிறவிக் குறைபாடு, (உ.ம் பிளந்த மேலன்னம், இரத்த ஒழுக்கு)

தமிழ் விளக்கம்

பிறவிக் குறைபாடு / பிறவி நோய் என்பது பிறப்பிற்கு முன்னரோ, பிறப்பின் போதோ, பிறந்து ஒரு மாதத்திற்குள்ளோ உருவாகும் குறைபாடு. பிறவிக் குறைபாடுகள் என்பது மரபணுக் குறைபாடுகளால் மட்டும் ஏற்படுவதில்லை. நோய் மூலம் அறிய முடியாத குறைபாடுகளை எல்லாம் பிறவிக் குறைபாடுகள் என்றும் கருத முடியாது. சிசு கருப்பைக்குள் வளரும்போது ஏற்படும் குறைபாடு, கருப்பை சேதத்தினால் உடலமைப்பு ரீதியாக ஏற்படும் கோளாறுகளை பிறவி ஒழுங்கீனம் (congenital anomalies) என்பர் (உ.ம் பிளந்த மேலன்னம்). இப்பிறவிக் குறைபாடுகள் மரபணு சார்ந்ததாகவோ, குரோமோசோம் சார்ந்ததாகவோ, கருப்பை சூழலாலோ, தொற்றுநோயாலோ அல்லது உருவத் தோற்றப் பிழைகளாலோ (errors of morphogenesis) ஏற்படலாம். கருவுற்ற தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, வைட்டமின்கள் அளவு, கருவுறும்போது இரத்தச் சர்க்கரை அளவு, கருப்பை சூழல், குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் சூழல், கருப்பையில் வளரும் சிசுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிறவிக்குறைபாடுகளுக்கு காரணமான ஒன்றை கருஊனமூக்கி, அல்லது கரு வளர்ச்சிக் குறைப்பி (teratogen) என்று அழைக்கிறார்கள்.

English

Diseases or disorders present at birth, such as cleft palate, hemophilia, and spina bifida.