conscience

மனச்சாட்சி, ஒரு மனிதனின் தார்மீக மதிப்புகள் (நியாய உணர்வு), பண்பட்ட நடத்தை, நன்மை தீமையை உய்த்துணரும் பாங்கு போன்றவை

தமிழ் விளக்கம்

மனச்சாட்சி என்பதை நன்மை தீமைகளை அறிய உதவும் உளச்சார்பு, உளத்திறன், உள்ளுணர்வு, மதிப்பிடுதல் எனலாம். மனிதர்கள் தாம் பெற்ற ஒழுக்க நிலைக்கு மாறாக நடக்க வேண்டிவரும் போது அவர்களை வருத்தமடையச் செய்வதும், நேர்மையாக நட்க்கும் போது கிடைக்கும் நன்னெறி / பெருமித உணர்வுகளும் மனச்சாட்சியால் ஏற்படுவதாகும். சாதாரண பாஷையில் இதை உள்ஒளி என்றும் உட்குரல் அல்லது அகக் குரல் என்றும் கூறுவர்.

English

A person's system of moral values, standards of behavior, and sense of right and wrong. See also superego.