consciousness-raising

முன்பிருந்ததைவிட சமூகப் பிரச்சனையில் அக்கறையையும் ஆர்வத்தையும் மக்களிடம் அதிகரிக்கச் செய்தல், பிரக்ஞையை விரிவாக்கல்

தமிழ் விளக்கம்

ஒருசில நிகழ்வுகளின் மீது பரந்த சமூகத்தின் கவனத்தை ஈர்க்க, விழிப்புணர்வை அதிகரிக்க, உணர்வெழுச்சியைத் தூண்ட ஒரு சிறிய குழு முன்னெடுக்கும் அரசியல் செயல்பாடு. அது மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ், புவி வெப்பமடைதல், அரசியல் போக்குகள், அரசின் தவறுகள், பாலினச் சிறுபான்மையினர், பெண்ணுரிமை போன்ற எதைப்பற்றியும் இருக்கலாம். ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது என்பது அதைக் கையாள்வதில், நிர்வகிப்பதில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தச் செய்யப்படும் முதல் முயற்சியாக அமையும். ஒன்றைப்பற்றி பரிந்து பேசி வாதிடுவதிலிருந்து விழிப்புணர்வு தூண்டும் முயற்சிகள் தொடங்கும்.

English

The process of helping an individual or group become aware of and more sensitive to a social condition, cause, or idea that had been of little prior interest.