conservatism

புதுமை வெறுப்பு, பழமையைப் பேணும் வாதம்

தமிழ் விளக்கம்

பழமை விருப்பம் என்பது பாரம்பரிய நடைமுறைகளை, நிறுவனங்களை தக்க வைத்துக் கொள்ள அறிவுறுத்தும் சமூக அரசியல் கண்ணோட்டம். நூற்றாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளும், சமூக அமைப்புகளும் அனுபவத் தொகுப்பாதலால் அதைப் பின்பற்றுவது பயனுள்ளது என்ற வாதம். பழமையைப் பின்பற்றுபவர்கள் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் அல்லது பழமை விரும்பிகள் என்றும், புதுமையை எதிர்ப்பவர்கள் முன்னிலை மீட்பர்கள் அல்லது பிற்போக்கு வாதிகள் என்றும் குறிக்கப்படுகின்றனர்.

English

An ideological orientation that tends to oppose change from previously established social values, mores, and structures. Many conservatives justify their ideology by presuming that traditional mores and structures are based on accumulated wisdom and are more effective than other options.