consultant

ஆலோசகர், கலந்துரைஞர், வருநெறியுரைப்பவர், மதிப்பீட்டாளர், நிபுணர், கலந்தறிதற்குரியர், ஆய்ந்த அறிவுரையாளர், உறுபொருள் உரைப்பவர்

தமிழ் விளக்கம்

ஆலோசகர் என்பவர் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவராகவும், தேவைப்படின் நிபுணத்துவம் பெற்றவர்களோடோ அல்லது நிறுவனங்களோடோ தொடர்பு கொள்ள முடிந்தவராகவோ இருப்பவர்கள். குறிப்பிட்ட பிரச்சனையின் தன்மை குறித்து தெளிவாக விளக்க முடிந்தவராகவும், அந்தப் பிரச்சனையைத் தீர்க்க வழிகாட்டி, தனிநபர் மற்றும் நிறுவனங்களின் நோக்கங்களை அடைய உதவுவார். சமூகப்பணியாளர்கள் பல நேரங்களில் சேவை நிறுவனங்களாலும், நீதிமன்றங்களாலும், அரசியல் ஆர்வக் குழுக்களாலும், செயல்பாட்டு அமைப்புகளாலும், மருத்துவார்களாலும், வாடிக்கையாளர்களாலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க ஆலோசகர்களாக நியமிக்கப்படுவதுண்டு.

English

One with a special expertise or access to those with the needed expertise whose skills are sought by professionals or organizations. Consultants advise or educate about the nature of the problem or possible solutions or find better ways to achieve the organization's goals. Social workers are often sought as consultants to social agencies, law courts, political groups, activist organizations, and clinicians or to clients who need to know how to deal with specific social institutions.