consultation
கலந்தறிதல், கலந்து பேசுதல், அறிவுரை பெறுதல், கருத்தறிதல், புத்திமதி கோரல்
தமிழ் விளக்கம்
பிரச்சனையுள்ளவரும், அப்பிரச்சனையைத் தீர்க்கத் தேவையான நிபுணத்துவம் உள்ள நபரும், நிறுவனமும் கலந்தறியும் தனிப்பட்ட உறவை ஆலோசனை பெறுதல் என்கிறோம். சமூகப்பணியில் கலந்தறிதல் என்பது பிரச்சனை தீர்க்கும் செயல்பாடு ஆகும். இச் செயல்பாட்டில் பிரச்சனைக்குட்பட்ட நபர்களுக்கோ, குழுவிற்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ ஆலோசனை சொல்வது மட்டுமல்லாமல், பிரச்சனை தீர்வதற்குரிய அனைத்து உதவிகளும் சமூகப்பணியாளரால் செய்யப்படும். இது மேம்போக்காக மேற்பார்வையாளர் பணி போன்று தோன்றினாலும், அதிலிருந்து வேறுபட்டது. மேற்பார்வையாளர் மாதிரி ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தும் நிர்வாக அதிகாரம் ஆலோசகருக்கு இல்லை. மேலும் ஆலோசனை சொல்வதென்பது இலக்கு சார்ந்த குறுகிய கால செயல்பாடு.
English
An interpersonal relationship between an individual or organization possessing special expertise and someone who needs that expertise to solve a specific problem. Social work consultation is a problem-solving process in which advice and other helping activity from the consultant is offered to an individual, group, organization, or community that is faced with a job-related problem. Unlike supervision, which is relatively continuous and encompasses many areas of concern, consultation occurs more on an ad hoc, or temporary, basis and has a specific goal and focus. Unlike the supervisor, the consultant has no special administrative authority over those to whom advice is given.