Consumers League, National
தேசிய நுகர்வோர் குழுமம்
தமிழ் விளக்கம்
தேசிய நுகர்வோர் கழகம், அமெரிக்கக் குடிமக்களை நுகர்வோராகவும், தொழிலாளர்களாகவும் கருதி அவர்கள் மேல் அக்கறை கொண்டு தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தைக் குறிப்பாக ஊதிய விகிதம், குழந்தைத் தொழிலாளர்கள், தனிமனித அந்தரங்கம், பாதுகாப்பான உணவு மற்றும் மருந்துகள் பற்றிய தகவல்கள் போன்றவற்றின் அவசியத்தை அரசுக்கும், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருப்பது. இக்கழகம் சமூகப்பணியின் தாயெனக் கருதப்படும் ஜேன் ஆடம்ஸ் அவர்கள் முயற்சியால் 1899 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நுகர்வுத் தன்மைக்கு ஏற்றமாதிரி அவர்களின் வேலை நிலைமைகள் இருக்க வேண்டும். நுகர்வோர்கள் என்ற முறையில் அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பயன்படுத்தும் சேவைகள் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், நியாய விலையில் கிடைக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் அனுசரணையான சந்தைச் சூழலை உருவாக்கப் பாடுபட்டது.
English
See National Consumers League (NCL).