contempt of court
நீதிமன்ற அவமதிப்பு
தமிழ் விளக்கம்
நீதி மன்றத்தையோ, நீதி மன்றத் தொடர்புடைய நீதிபதிகளையோ, நீதி வழங்கிய முறை பற்றியோ வேண்டுமென்றே அவதூறு அல்லது அவமரியாதை செய்வது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, உத்தரவிற்குக் கீழ்ப்படியாமல் இருப்பது போன்ற செயல்களை நீதிமன்ற அவமதிப்பு என்கின்றனர். இது நீதி மன்றத்திற்கு உள்ளே வழக்காடலின் போதோ (நேரடி அவமதிப்பு), நீதி மன்றத்திற்கு வெளியே நீதிமன்ற உத்தரவிற்குக் கட்டுப்படாமல் இருப்பது போன்ற செயல்களால் வெளிப்படும். இவையெல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
English
Behavior that interferes with the administration of justice or shows disrespect for the dignity and authority of the court. Such behavior may occur within the courtroom during a trial (“direct contempt”) or outside (“constructive contempt”). See also civil contempt.