contingency analysis

தற்செயல் ஆய்வு

தமிழ் விளக்கம்

தற்செயல் கோட்பாடு ஆய்வு என்பது எதையும் ஒற்றையாக, தட்டையாக புரிந்து கொள்ளமுடியாது என்றும், எதையும் அந்ததந்த சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு புரிந்துகொள்ள வேண்டும், செயல்படவேண்டும் என்று வலியுறுத்தும் கோட்பாடு. சமயசந்தர்ப்பத்திற்கேற்ற கோட்பாட்டை நடத்தையியல் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருக்கும் நான்கு அனுமானங்களின் அடிப்படையில் சமூகப்பணியாளர்கள் அணுகுகின்றார்கள்.
1. தனிநபர்களும், குடும்பங்களும், குழுக்களும், சமுதாயமும் செயல்பாட்டுத் தன்மை (நடத்தை) கொண்டவர்கள்.
2. அந்தச் செயல்பாடுகள் விளைவுகளை ஏற்படுத்தினாலும் பலநேரங்களில் அந்த விளைவுகள் தற்செயலாக அமைவதை அவர்கள் அனுபவ ரீதியாக உணர்கிறார்கள்.
3. நிச்சயமற்ற, எதிர்பாராத விளைவுகளின் தாக்கமே அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது.
4. ஒருவருடைய செயல்பாடுகளின் மீதான இந்த தற்செயல் சம்பவங்களை உன்னிப்பாக அளவீட்டு, பகுப்பாய்வு செய்யும் போதுதான் தங்களை நாடிவரும் வாடிக்கையாளரின் பிரச்சனையை முழுமையாகக் கையாளும் அணுகுமுறையை சமூகப்பணியாளர்கள் பெறமுடியும்.

English

An approach to social work practice based on principles of behaviorism, including four propositions that (1) individuals, families, groups, communities, and societies behave; (2) all behavior is followed by consequences; (3) the consequences of a given behavior largely influence the future occurrence of that behavior; and (4) empirical analysis of these contingencies can be used effectively in understanding and treating all strata of social work clients. According to Bruce A. Thyer (“Contingency Analysis: Toward a Unified Theory for Social Work Practice,” Social Work, 32 [March–April 1987], pp. 150–157), contingency analysis can form the basis of a unified theory for all levels of social work practice.