continuing-care retirement communities (CCRC)

ஓய்வு பெற்ற சமூகங்களுக்கானத் தொடர்ச்சியான பராமரிப்பு

தமிழ் விளக்கம்

ஓய்வு பெற்ற சமூகங்களுக்கான தொடர்ச்சியான பராமரிப்புக் குடியிருப்புகள் என்பது, 75 வயதைக் கடந்த, ஓரளவு ஆரோக்கியமான, தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறக்கூடிய நிலையில் அமைந்திருக்கும் 300 -500 முதியோர்களுக்கான குடியிருப்பு. வளாகச் சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனித்தனிவீடுகள், பொதுவான பொழுது அம்ஸங்கள் என்று பல வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மாதிரியான குடியிருப்புகள் இலாப நோக்குடன் செயல்படும் வீட்டுமனை விருத்தி தொழிலில் ஈடுபாட்டிருக்கும் (real estate ventures) நிறுவனங்களால் நடத்தப்படுகின்றது. ஒரு முதியோரின் தேவை, ஆரோக்கியம் பொறுத்து நுழைவு / அனுமதிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

English

Villages usually designed for about 300–500 older people, most of whom enter when older than age 75 and relatively healthy. The facilities are in campuslike settings with apartments, townhouses, and group recreation centers; close monitoring and easy access to health care are provided. CCRCs are usually for-profit real estate ventures and cater to affluent older people by requiring significant entry payments (depending on health care options chosen) and monthly maintenance fees.