continuing education
தொடர்கல்வி
தமிழ் விளக்கம்
இது இருவேறு பொருள்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை. 1.பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் கல்லூரிப் படிப்பு, பட்டப் படிப்பல்லாத தொழில் கல்வி, ஆளுமை மேம்பாடுப் பயிற்சிகள், அஞ்சல் வழிக்கல்வி, சுயமாகக் கற்றல், இணையக் குழுக்களின் மூலம் கற்றல் என்று பலவகைகள் அடங்கும் 2..சமூகப்பணி போன்ற சிறப்புத் திறன் (professional) தேவைப்படும் துறைகளில் (மருத்துவம்,சட்டம் இன்னபிற), அத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் அடிப்படைக் கல்வியைத் தொடர்ந்து, அத்துறை சார்ந்த வளர்ச்சியை அறிந்துகொள்ள, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் துறை சார்ந்த அறிவைப் புதுப்பித்துக்கொள்ள கூடுதல் பயிற்சிகளைப் பெறவேண்டும். தொழில் சார்ந்த உரிமத்தைப் புதுப்பிக்க விரும்புபவர்கள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலம் தொடர் கல்விப் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டுமென்று, உரிமம் வழங்க சட்டப்படி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள் விதிமுறைகளை வகுத்துள்ளன.
English
Training taken by social workers and other professionals who have already completed the formal education required to enter their field. Most professions require their members to keep up with the current knowledge base by participating in specified additional training within certain time limits. For example, state licensing boards for social workers may require them to obtain a specific number of CEUs (continuing education units) by successfully completing qualified academic or professional courses.