contraception
கருத்தடை, செயலாலோ, சாதனத்தாலோ கர்ப்பமாவதைத் தடுத்தல்
தமிழ் விளக்கம்
கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதைச் செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும். பாரதிதாசன் குறிப்பிட்ட மாதிரி, காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த கதவொன்றைக் காணுதல். அவையாவன - விந்து வெளியேற்றத்தின் முன்னர் ஆண்குறியைப் புணர்புழையிலிருந்து வெளியே எடுத்தல் பன்னெடுங்காலமாகப் பயன்படும் கருத்தடை முறையாகும். மாதவிடாய்ச் சுழற்சியில் சில குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் உடலுறவு கொள்ளுதல் மற்றொரு கருத்தடை முறையாகும். இருப்பினும் இம்முறைகள் உறுதியாக கருவுறுதலைத் தவிர்க்க உதவும் என்று கூற முடியாது. 2 இயற்கை முறைகள் - நாள் கணக்கு வைக்கும் (காலண்டர்) முறை, பில்லிங்ஸ் முறை, உடலில் வெட்ப மாறுபாடு 3. தடுப்பு முறைகள் - ஆண் கருத்தடை சாதனம், பெண் கருத்தடை சாதனம், ரிங் கருத்தடை சாதனம், ஸ்பெர்மிசைடு 4. நடைமுறையில் உள்ள கருத்தடை முறை - தாய்ப்பால் அளிப்பது 5. கருத்தடுப்பு சாதனங்கள் - ஐயுடி 6. ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள் - ஹார்மோன் முறைகள், வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள், ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள், அவசரக் காலக் கருத்தடை மாத்திரைகள் 7. நிரந்தரக் கருத்தடை முறைகள் - பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை, ஆண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை. குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. பல மதங்கள், கலாசாரங்கள் கருத்தடை முறைகள் பற்றி எதிர்ப்புணர்வு கொண்டுள்ளன. இருப்பினும் கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கருத்தடைக்கான எதிர்ப்பு குறைவானதாகவே உள்ளது.
English
Any action or device used to prevent pregnancy. This includes abstinence; limiting coitus to nonfertile periods in the woman's cycle; or using devices such as a condom, intrauterine device (IUD), diaphragm, contraceptive pills, and sterilization.