contract
ஒப்பந்தம், உடன்படிக்கை
தமிழ் விளக்கம்
ஒப்பந்தம் (Contract) என்பது 'வாக்குறுதிகளைக் கொண்டு சட்ட வயதடைந்த இரண்டோ, இரண்டிற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையேயோ, கட்சிக்காரர்களுக்கிடையேயோ (competent persons-திறத்தவர்) உருவாக்கப்படும் உடன்படிக்கைகள்' ஆகும். (an 'agreement' made of a set of promises). இவ்வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள், கடப்பாடுகள் பற்றியதாக இருக்கும். ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு (Breach of contract) ஏற்படும் சந்தர்பங்களில் நீதிமன்றங்களை நாடி குறைதீர்ப்பினைப் (remedies) பெறமுடியும். ஒப்பந்தம் இருதிறத்தவர்களிடையே யார் எதைக்கொடுக்கின்றார்கள் (offer), யார் பெற்றுக்கொள்கிறார்கள் (acceptance) அதிலிருக்கும் நிபந்தனைகள் (consideration) என்பதையும் அது பரஸ்பர புரிந்துணர்வுடன் (mutual obligation) ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். சமூகப்பணியில் ஒப்பந்தம் என்பது சமூகப் பணியாளருக்கும் அவர் சேவையைப் பெற வரும் வாடிக்கையாளருக்கும், சேவை / உதவியின் நோக்கங்கள், அது வழங்கப்படும் முறை, அதற்கான கால அவகாசம், மற்றும் அவர்களுடைய பரஸ்பர பொறுப்புக்கள் பற்றி வாய்மொழியானதாகவோ, எழுத்துபூர்வமானதாகவோ, இருவராலும் புரிந்து கொள்ளப்பட்டதாகவோ அமையலாம்.
English
A written, oral, or implied agreement between the client and the social worker as to the goals, methods, timetables, and mutual obligations to be fulfilled during the intervention process.