control
கட்டுப்படுத்து, ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அடக்கியாள், கட்டுறுத்தியம்
தமிழ் விளக்கம்
கட்டுப்படுத்தல் சற்றேறக்குறைய ஒரே பொருளில் பல துறைகளிலும் உபயோகப்படுத்தபடுகின்ற வார்த்தை. நிர்வாக இயலில், திட்டமிடல், கூட்டிணைத்தல் (organizing), பணியாளர் குழுவமைத்தல், நிர்வாகம் நடத்துதல் போன்ற செயல்களைப் போன்று, கட்டுப்படுத்தலும் ஒரு பிரதான நிர்வாக முறை. கட்டுப்படுத்தல் என்பது ஏற்கனவே திட்டமிட்டபடி, கொடுக்கப்பட்ட உத்தரவுகளின்படி, நெறிமுறைகளின்படி காரியங்கள் செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதாகும். கட்டுப்படுத்துதல் என்பது தவறுகளைக் கண்டறியவும், அதைச் சரிசெய்யவும், மீண்டும் தவறு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது. சமூகநல நிர்வாகத்தில் கட்டுப்படுத்தல் என்பது திட்டம் மற்றும் பயனாளிகள் பற்றிய தகவல்களையும், திட்டச் செயல்முறைகளையும் முறைப்படுத்தி அதன் மூலம் திட்டநோக்கங்களை அடைய உதவும் செயல்முறையாகும்.
English
1. To regulate. 2. To exercise direction or restraint over another. 3. In social research, a standard for comparison. 4. In social welfare management, a procedure for regulating the flow of information and activity so that efforts to achieve goals are coordinated.