controlled emotional involvement

(பிரச்சனைக்குள்ளானவர் / வாடிக்கையாளர் மீதான சமூகப் பணியாளர்) உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவது

தமிழ் விளக்கம்

உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதென்பது சமூகப்பணியின் (தனியாளர் பணி – case work) தொழில் நெறிகளில் ஒன்று. தனியாளர் பணியின் நடைமுறை நெறிகள் (principles) பலவாறாகச் சொல்லப்பட்டாலும் (ஏழு, ஒன்பது, பன்னிரெண்டு) எல்லாவற்றிலும் உள்ளடங்கியது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவது என்ற நடைமுறை நெறி. ஒரு சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளரின் உணர்வுகளைப் (வாய்மொழியாகவோ, உடல்மொழியாகவோ வெளிப்படுத்திய, வெளிப்படுத்தாமல் விட்ட) புரிந்துகொண்டதற்கு / உள்வாங்கிக் கொண்டதற்கு மறுவினையாகத் தன்னுடைய உணர்வுகளையும், ஆதரவையும், பச்சாதாபத்தையும் வெளிப்படுத்தும் போது, அந்த வெளிப்பாடு பயனுள்ளதாகவும், பிரச்சனையைத் தீர்க்க உதவியாயும் இருக்கவேண்டும். வாடிக்கையாளரின் உரையாடல் மீதோ, வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மீதோ அக்கறையாற்றிருப்பதாகவோ அதிக ஆர்வம் காட்டுவதாகவோ, அது ஏளனத்திற்குறியெதென்றோ, சுவாரசியமாற்று இருப்பதாகவோ தன் வாய்மொழியாகவோ, உடல்மொழியாகவோ, பார்வையிலோ வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளுமளவு எந்த அறிகுறியும் சமூகப்பணியாளர் காட்டலாகாது.

English

An ethical principle in social work in which feelings, support, and empathy for the client are felt and expressed but only to the extent that such reactions are effective, helpful, and part of the intervention plan. The skilled practitioner learns to show and conceal emotional reactions to the client, finding the optimal response somewhere between apathy and overidentification. Controlled emotional involvement is one of the major factors in the helping relationship.