controlled substances
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள்
தமிழ் விளக்கம்
ஒரு பொருள் / மருந்தின் உற்பத்தி, உடமை, பயன்பாட்டின் மீது சட்டப்படியான நிபந்தனைகள் போதைப் பொருட்கள், மயக்க மருந்துகள், மனவெழுச்சித் தூண்டிகள் மீது இது மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒரு பொருளின் ஆபத்தான தன்மையை, அதன் மருத்துவப் பயன்பாடு, அந்தப் பயன்பாட்டிலுள்ள பாதுகாப்பு (பக்கவிளைவுகள்), அது எவ்வளவு எளிதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி, மனிதர்களைப் பழக்த்திற்கு அடிமையாக்கும் போன்ற காரணிகளை வைத்து அப்பொருளின் உபயோகத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சட்டமியற்றி, அச்சட்டத்தில் அட்டவணைப்படுத்தியுள்ள பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் எனக் குறிக்கப்பிடுகின்றது. இச்சட்டம் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை ஐந்து வகைகளில் அட்டவணைப்படுத்துகிறது.
1. எந்தவிதமான மருத்துவப் பயன்பாடு இல்லாமை, உபயோகிக்கப் பாதுகாப்பாற்ற, அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிற பொருட்கள் (உ.ம். ஹெராயின், லைசெரிக் அமிலம் டைத்திலமைடு (LSD) மரிஜுவானா, இன்னபிற)
2. மருத்துவப்பயன்பாடுள்ள, அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிற, பழக்கத்திற்கு அடிமையாக்குகின்ற தன்மையுள்ள பொருட்கள் (உ.ம். மார்பின், பென்சிசைக்கிளிடின் (PCP), கோகைன், மெத்தடோனை, மற்றும் மீதம்பெடமைன்).
3. அனபோலிக் ஸ்டெராய்டுகள், ஆஸ்பிரின் அல்லது டைலனோல் ® கலந்த கோடென் மற்றும் ஹைட்ரோ கோடென் மற்றும் சில பார்பிடியூரேட்ஸ்.
4. மருத்துவ உபயோகம், மிகக் குறைந்த அளவு துஷ்பிரயோகத்திற்குள்ளாவது, ஓரளவு பழக்கத்திற்கு அடிமையாக்குவது (உ.ம். Darvon ®, Talwin ®, Equanil ®, வேலியம் ®, மற்றும் ஸானக்ஸ் ®).
5. மருத்துவ உபயோகம். மிகக் குறைந்த அளவு துஷ்பிரயோகம், மிகக் குறைந்த அளவு பழக்கத்திற்கு அடிமையாக்குதல் (உ.ம் கொடென் கலந்த இருமல் மருந்துகள்). .

English
Drugs that, because of their potential for abuse or addiction, have limited availability and are strictly regulated or outlawed. These substances include marijuana, narcotics (opiates such as opium, heroin, morphine, and codeine and nonopiates such as methadone), stimulants (such as cocaine and amphetamines), depressants (such as barbiturates and tranquilizers), and hallucinogens (such as LSD, mescaline, and peyote).