conversion symptoms
உளவியல் கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகள்
தமிழ் விளக்கம்
உளவியல் கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகள். உள இயக்கக் கோட்பாடுகளின் படி, வருத்தமேற்படச் செய்கின்ற, மனதை அலைக்கழிக்கின்ற எண்ணங்களும் ஆழ்மன இச்சைகளும் உடல் (சரீர) வெளிப்பாடுகளாக மாற்றப்படுகின்றது. அதாவது மனத் துயரங்கள் உடலைத் தாக்குகின்றது. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றது இதன் விளைவாக சிலநேரங்களில் உடல்நடுக்கம், தலைவலி போன்ற சாதாரண அசவுகரியக் குறைவும் பக்கவாதம், பார்வை இழப்பு போன்ற நிலையும் ஏற்படுகிறது.
English
Somatic complaints that are psychogenic. The term derives from psychodynamic theories that hypothesized that unconscious and intolerable thoughts or drives are converted into physical manifestations, most commonly involving the nervous system (for example, paralysis and blindness).