coping skills

சமாளிக்கும் திறன்

தமிழ் விளக்கம்

சமாளிக்கும் திறன் என்பது ஒருவர் தன்னுடைய பிரச்சனைகளையும் (மன அழுத்தம்), தன்னுடைய சகவாசத்தால் (interpersonal) வரும் பிரச்சனைகளையும் தீர்க்கவும், குறைக்கவும், பொறுத்துக் கொள்ளவும் சுய நினைவுடன் மேற்கொள்ளும் முயற்சிகளாகும். சமாளித்தல் என்பது அகத்தகைவின் வெளிப்பாடு. சுயநினைவின்றி அனிச்சையாக மேற்கொள்ளப்படும் சமாளித்தல் உளப் பாதுகாப்பு முயற்சிகள் (defense mechanisms) எனப்படும். சமாளிக்கும் திறன் என்பது பொதுவாக ஆக்கபூர்வமானதாயும், ஒருவருடைய நடத்தையை அகவினக்கத்துடன் மாற்றிக்கொள்ள வழிவகுப்பதாயும் இருக்கும். இது ஏற்பட்டுவிட்ட மன அழுத்தத்தைச் சமாளிக்க எதிர்வினை (reactive coping) ஆற்றுவதென்றும், மன அழுத்தம் ஏற்படாமல் வருமுன் காக்கும் (proactive coping) சமாளிக்கும் திறன் என்று இருவகைப்படும். சமாளிக்கும் திறன் ஒருவருடைய ஆளுமையையும், அவருடைய சூழல் உருவாக்கும் மன அழுத்தக் காரணிகளையும் சார்ந்திருக்கும்

English

Effective behavior an individual uses in responding to or avoiding sources of stress. Typical coping skills include obtaining new needed information, preplanning, maintaining control over one's emotions and impulses, delaying gratification, and seeking more-appropriate alternative ways to achieve goals.