corporal punishment

உடலொறுப்பு, வலிக்கும் அளவு சித்திரவதை செய்தல், கசையடி, உடல் ரீதியாகத் துன்புறுத்தி தண்டனை வழங்கும் முறை

தமிழ் விளக்கம்

ஒரு குற்றத்திற்குத் தண்டனையாகவோ, தவறு செய்தவரைக் கட்டுப்படுத்தவோ, தவறான எண்ணப்பாங்குடையவரை, ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தைப் பாங்குடையவரை, திருத்த, அச்சுறுத்தும் நோக்கத்துடன், கைகளாலோ, கருவிகொண்டோ (பிரம்பு, சவுக்கு), நீதிமன்றத்திலோ, சிறைச்சாலையிலோ, வீட்டிலோ, கல்வி நிலையத்திலோ வலியேற்படும்படி அடித்து உதைத்தல்.
இந்த மாதிரியான தண்டனை மூன்று இடங்களில் நடைமுறையில் உள்ளது 1. பெற்றோர்களால் வீட்டில் கையாளப்படும் முறைகள் 2. பள்ளிகளில், தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆசிரியர்களாலும், தொழில் பயிற்றுவிப்பவர்களாலும் கையாளப்படும் முறைகள் 3. நீதிமன்ற ஆணையின் படியோ, சிறைவிதிகளை மீறும் பொழுதோ கையாளப்படும் நடைமுறைகள். ஆனால் குற்றமிழைத்தவர்களை உடல் ரீதியாகத் துன்புறுத்துவது பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

English

Inflicting physical pain for the purpose of punishment, as in spanking a misbehaving child.