Corporate Social responsibility

நிறுமங்களின் சமூகப் பொறுப்புடமை

தமிழ் விளக்கம்

தங்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக தனிமனிதர்கள் முயலும்போது அது பிறருக்கும் சூழலுக்கும் இடையூறு ஏற்படாவண்ணம் சமூகப் பொறுப்புடன் அமையவேண்டுமென்பது எல்லாச் சமூகங்களாலும் நிர்பந்திக்கப்படுகிற / ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைக் கோட்பாடு. இந்த அணுகுமுறையைத் தொழில் நிறுமங்கள் தங்கள் செயல்பாடுகளில் கடைபிடிக்கத் தூண்டுகின்ற / வலியுறுத்துகின்ற அணுகுமுறையை நிறுமங்களின் சமூகப்பொறுப்புடமை எனலாம். நிறுமங்களின் சமூகப் பொறுப்புடமை என்பது சட்டத்திற்கு உட்பட்டு, சமூகநெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களல்லாத மக்களின் நலம் பேணியும், தங்களுடைய செயல்பாடுகள் சுற்றுச் சூழலுக்கு கேடுறா வண்ணமும், அதைப் பேணத்தகுந்த (Sustainable) முறையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உள்ளடக்கிய அணுகுமுறை. தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிதிப் பரிவர்த்தனையில் சமூக நலன் பேணும் அறச் செயல்களிலும், பேணத்தகுந்த சுற்றுச்சூழலை நடைமுறைப்படுத்த உதவும் பசுமை முயற்சிகளிலும் முதலீடு செய்யவேண்டுமென்பதும் தொழில் நிறுமங்களின் சமூகப்பொறுப்புடமையாக கருதப்படுகிறது. இம்முயற்சிகள் பொதுவாக கீழே கண்ட செயல்முறைகளைக் கொண்டிருக்கும்.
1. சுற்றுச்சூழல் அனுசரணை, சுற்றுச் சூழல் மேம்பாடு - மாசுறாவண்ணம், குறைந்த அளவு காரியத் தடத்தை (carbon footprint) உருவாக்குகின்ற, பேணத்தகுந்த சூழலை நிலைநிறுத்துகின்ற நடைமுறைகளையோ அல்லது அதற்கான முயற்சிகளையோ கொண்டிருக்கவேண்டும். 2. கொடையாண்மை - தொழில் நிறுமங்கள் தேசிய அளவில், உள்ளூர் அளவில் பிற தொண்டுநிறுவனங்களால் செய்யப்படும் சமூக சேவைகளுக்கு நிதி உதவி செய்வது. 3. தொழிலாளர்கள் பால் காட்டும் நேசம் - தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களிடத்தில் பாரபட்சமற்றும், தொழிலாளர்களைக் கையாள்வதில் நியாயமன நடைமுறைகளை கடைப்பிடிப்பதும், தொழிலாளர்கள் பால் பரோபகாரச் சிந்தனையுடன் நடந்து கொள்வதும் தொழில் நிறுமங்களின் சமூகப்பொறுப்புடமையே ஆகும். பன்னாட்டுத் தொழில் நிறுமங்கள் தாங்கள் தொழில் செய்யும் நாடுகளின் மாறுபட்ட சமூக, சட்டப் பின்னணியை பின்பற்றி அணுக்கமாக நடந்துகொள்வதும் நிறுமங்களின் சமூகப் பொறுப்புடையாகக் கருதப்படுகிறது. 4. தன்னார்வச் செயல்பாடுகள் - தொழில் நிறுமங்கள் தங்களுடைய மனித வளத்தை, கையாளும் தொழில் நுட்பத்தை குறிப்பிட்ட சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் முயற்சிகளுடன் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பதும் சமூகப் பொறுப்புடமையின் பாற்பட்டதே

English

Social responsibility means that individuals and companies have a duty to act in the best interests of their environments and of society as a whole. Social responsibility as it applies to businesses is known as corporate social responsibility, or CSR. Corporate social responsibility (CSR) refers to business practices involving initiatives that benefit society. A business's CSR can encompass a wide variety of tactics, from giving away a portion of a company's proceeds to charity, to implementing "greener" business operations.There are a few broad categories of social responsibility that many of today's businesses are practicing:
1.Environmental efforts: One primary focus of corporate social responsibility is the environment. Businesses regardless of size have a large carbon footprint. Any steps they can take to reduce those footprints are considered both good for the company and society as a whole. 2.Philanthropy: Businesses also practice social responsibility by donating to national and local charities. Businesses have a lot of resources that can benefit charities and local community programs. 3.Ethical labor practices: By treating employees fairly and ethically, companies can also demonstrate their corporate social responsibility. This is especially true of businesses that operate in international locations with labor laws that differ from those in the United States. 4.Volunteering: Attending volunteer events says a lot about a company's sincerity. By doing good deeds without expecting anything in return, companies are able to express their concern for specific issues and support for certain organizations.