corporate welfare

பெருநிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சகாயங்கள்

தமிழ் விளக்கம்

ஏழைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப்போல் வணிக, தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள். உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பளிக்கவும் வணிக நிறுவனங்கள் இலாபமடைந்து நிலைக்க அரசு தரும் பல்வேறு வசதிகள் - இடவசதி, கடனுதவி, வரிச்சலுகை, மானியம் போன்றவை. இம்மாதிரியான சலுகைகள் தரும் அரசை முதலாளித்துவத்தின் எடுபிடி என்றும் முதலாளித்துவத்தின் நண்பன் (crony capitalism) என்றும் அழைக்கின்றனர்.

English

Providing services, financial assistance, subsidies, or other benefits to organizations to help them maintain their viability or profitability. For example, a national government might reduce the tax rates or subsidize part of the expenses of a labor-intensive industry because it supposedly provides many jobs. To enhance the local economy, a municipal government might offer to give land at low or no cost to companies that relocate to the area. Some who are most strongly opposed to governmental welfare benefits for individuals favor corporate welfare programs for businesses.