corrective feedback
சரிசெய்யும் முறையில் கூறப்படும் பின்னூட்டம், கருத்து
தமிழ் விளக்கம்
சமூகப்பணி நிர்வாகத்திலும், மேற்பார்வையிலும் ஏற்கெனவே பின்பற்றப்படுகின்ற நடைமுறைக்கும், பின்பற்ற அல்லது அடைய நினைக்கின்ற நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் பற்றி கருத்து சொல்வது. இக்கருத்து நேர்மறையானதாகவோ, எதிர்மறையானதாகவோ இருக்கலாம். இக்கருத்து குறை காணும் மனோபாவத்துடன் இல்லாமல், விரும்பிய இலக்கை அடைய உதவுவதாய் இருக்கவேண்டும். செய்வன திருந்தச் செய்ய உதவியாய் இருக்கவேண்டும். உதாரணமாக மாணவர்களின் முன்னேற்றம் கருதி இந்த மாதிரியான கருத்துக்கள் சொல்வது கல்வி நிலையங்களில் வாடிக்கை.
English
In social work administration and supervision, the communication of a discrepancy between existing and desired goals and behaviors. This feedback may be positive as well as negative and should occur privately, without blame, and with emphasis on desired behaviors. See also supportive feedback.