cost-of-living adjustment (COLA)
வாழ்க்கைச் செலவைச் சரிக்கட்டல்
தமிழ் விளக்கம்
வாழ்க்கைச் செலவு என்பது ஒரு சமூகத்தில் (பெரும்பாலும் இடம் சார்ந்தது உ.ம். தேசம்) குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்கச் செய்யப்படும் செலவினங்கள். இது பணத்தைக்கொண்டு வாங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு (பணவீக்கத்தாலோ, பணவாட்டத்தாலோ) கூடுவதை வைத்தோ, குறைவதை வைத்தோ கணக்கிடப்படுவது. பொருட்களின் மதிப்பு (விலை) உயரும்போது, அதன் நுகர்வு குறையவும், பொருட்களின் மதிப்பு (விலை) குறையும் போது அதன் நுகர்வு அதிகரிப்பதும் வாடிக்கை. வாழ்க்கைச் செலவை ஒட்டியே பணியாளர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
English
An increase or decrease in benefits based on changes in the relative purchasing power of money (inflation or deflation).