cost-of-living index

வாழ்க்கைச் செலவுக் குறியீட்டெண்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொண்டு எவ்வளவு பொருட்களை, சேவைகளை வாங்க முடியும் என்பதைக் கணக்கிட உதவும் முறை. அமெரிக்காவில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுக்கூடியது என்று கருதப்படும் 296 பொருட்களின் விலையைக் கொண்டு இது கணக்கிடப்படுகின்றது. மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அடிப்படையில் விலைக் குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. இதற்கு அடிப்படை ஆண்டாக 1993-94 ம் ஆண்டு ஒப்பிடப்படுகின்றது. உதாரணமாக நடப்பு ஆண்டில் வாழ்க்கைச் செலவு குறியீட்டு எண் 50 சதவீதமென்றால், ஒப்பீட்டு ஆண்டைவிட 50 சதவீத அளவுக்கு விலை உயர்வு இருப்பதாகப் பொருள். இந்த விலையுயர்வை ஈடுகட்டக் கொடுக்கப்படும் அதிக ஊதியம் அகவிலைப்படி எனப்படுகின்றது. இந்தியாவில் விலைக் குறியீட்டென்னைக் கணக்கிட அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் 435 பொருள்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இப்பொருள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. 1. உணவுப் பண்டங்கள், 2. எரிபொருள்கள், 3. உற்பத்திப் பொருள்கள்.
முதல் பிரிவான உணவுப் பண்டங்களில் அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 பொருள்கள் இடம் பெறுகின்றன. இரண்டாவது பிரிவில் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது பிரிவில் துணி, காகிதம், போக்குவரத்து சாதனங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட 318 பொருள்கள் இடம் பெறுகின்றன.

English

A measure to determine the relative purchasing power of money at a given time in a given society. In the United States, the index is calculated by weighting the average prices of 296 commodities that are considered important or representative of people's overall needs.